அபிநயா:
”ஏண்டி!! கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஒரு சாமான் வாங்கி கொடுத்தா அதை பத்திரமா பார்த்துக்கலாமில்ல? “, ன்னு அம்மா திட்டிக்கிட்டே இருந்தாங்க.
“நான் பாக்ஸ எடுத்து வெளில வெச்சிட்டு தண்ணி குடிக்க தாம்மா போனேன். திரும்பி வந்து பார்த்தால் ஜாமெட்ரி பாக்ஸ காணும் . ‘மிஸ்’ கூட எக்ஸாம் முடிஞ்சி எல்லார் பேகையும் செக் பண்ணினாங்க. கெடைக்கவே இல்ல. நாளைக்கு மாத்ஸ் செகண்ட் பேப்பர் பா. அதுக்கும் கண்டிப்பா வேற பாக்ஸ் வேணும்பா. இல்லேன்னா சுகந்தி டீச்சர் திட்டுவாங்க.”
“ஆமா!! இதுக்கு மட்டும் ஒடனே அப்பா கிட்ட போய்டு. சும்மா எப்…”
“ப்ச்!! ஏன் கொழந்தைய போட்டு திட்டிக்கிட்டே இருக்கே? அவ என்ன தெரிஞ்சா தொலைச்சா?”, ன்னு அப்பா சொல்லலைனா நான் அங்கேயே அழுதிருப்பேன். “பொறுப்பெல்லாம் அவளுக்கு தானா வரும். இத போய் பெருசு படுத்திக்கிட்டு!! பாரு! இப்பவே அவ கண்ல கொளம் கட்டியிருக்கு. உனக்கு ஜாமெட்ரி பாக்ஸ் தானடா வேணும். அப்பா ராத்திரி போய் வாங்கிண்டு வரேன். இனிமே தொலைக்காம பார்த்துக்கோ. என்ன?” இது அப்பா
அப்ரோமும் அம்மா விடாம திட்டிக்கிட்டு இருந்தாங்க. எனக்கும் ஜாமெட்ரி பாக்ஸ் தொலைஞ்சு போனதுல ரொம்ப வருத்தம் தான். ஆனா நான் என்ன தெரிஞ்சா தொலைச்சேன்?
ஆனாலும் நைட்டு தூங்க போறதுக்கு முன்னாடி ப்ரே பண்ணினேன், ‘என் ஜாமெட்ரி பாக்ஸ எடுத்தவ எனக்கு அத திருப்பி கொடுத்திடனும்’ன்னு . ஏனோ first timeஆ, என் உலகமே இருண்டு போன மாதிரி ஒரு பயம். சுகந்தி டீச்சர் திட்டுனா அப்டிதான் இருக்கும்னு எல்லாரும் சொல்லிருக்காங்க. அதனாலதானோ என்னவோ? தெரில!! 8 மணிக்கு அப்பா போய் புது ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கிட்டு வந்தாரே. அப்போ தான் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது !!
சாரதா:
“கண்ணு! புதுசா சாமேட்ரி பாக்ஸ் கேட்டேல்லே? அத அம்மா நாளைக்கு எப்பிடியாவது வாங்கி குடுத்திடறேன்” ன்னு அம்மா சொன்னாங்க.
“வேணாம்மா! நான் இன்னைக்கு ‘க்யூ’வில நிக்கும் போது ஜன்னல் கிட்டக்க ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் பார்த்தேன். லக்கி பாக்ஸ் மா. பரீட்சை நல்லா பண்ணினேன் இன்னிக்கி”. ஏனோ அது வேற ஒருதவங்கள்துன்னு எனக்கு தோணவே இல்ல அப்போ. ஆனா என்ன பண்றது! எனக்கு வரவே வராத கணக்கெல்லாம் இன்னிக்கி சூப்பரா வந்ததே!! எனக்கு அத திருப்பி கொடுக்கவே மனசில்ல. சரி! யாராவது கேட்டால் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.
ஆனால் அதுக்கப்றோம் அந்த ஜாமெட்ரி பாக்ஸ என்னிக்கி பார்த்தாலும் எனக்கு கஷ்டமா இருந்தது. ரெண்டு மாசம் கழிச்சி, annual exam வந்தது. கணக்கு!! பரீட்சை முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. என் பின்னாடி இருந்த ‘B section ‘ abinaya என் பேப்பரையே பார்த்துட்டு இருந்தாள். நான் திரும்பி பார்த்தேன்.
“என்ன நடக்குது இங்க? ரெண்டு பேரும் அவங்கவங்க பேப்பர பார்க்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”. அந்த சோடாபுட்டி சரோஜா மிஸ்ஸ எனக்கு புடிக்கவே புடிக்காது. எப்போ பார்த்தாலும் என்ன திட்டும்.
“இல்ல மிஸ். இவ என் பேப்பரையே பார்த்திட்டு இருக்காள். அதனாலதா…”, அதுக்குள்ளே அபிநயா,
“இல்ல மிஸ்! இல்ல மிஸ். அவள் வெச்சிருக்றது 2 months முன்னாடி தொலஞ்சு போன என்னோட ஜாமெட்ரி பாக்ஸ் மிஸ். நீங்க வேணும்னா பாருங்க. அதுல ‘N A’ ன்னு என்னோட initials போட்ருக்கும் .”
“Exam முடிச்சிட்டு ரெண்டு பேரும் போய் பிரின்சிபல பாருங்க.” ன்னு என்ன பார்த்து மொறச்சிக்கிட்டே சொன்னாங்க. சொன்னேனில்ல! அவங்களுக்கு என்ன புடிக்காதுன்னு. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. ஏனோ first timeஆ, என் உலகமே இருண்டு போன மாதிரி ஒரு பயம். Exam எழுதவே முடியல அதுக்கும் மேல.
அபிநயா:
’அந்த King Lear போட்ட பாக்ஸ் என்னோடது தான். இன்னிக்கி எப்டியாவது அத திருப்பி வாங்கிடனும். பிரின்சிபால் கிட்ட போகணுமே. van அது வரைக்கும் நிக்காதே!!’
சாரதா:
‘அபிநயா வேற நேரா மிஸ் கிட்ட சொல்லிட்டா. நான் ஒண்ணும் திருடல. இது எனக்கு கெடைச்ச லக்கி பாக்ஸ். அவ்ளோதான்! சரி!! Answer sheet அ குடுத்துட்டு வெளில இருக்கலாம். அபிநயா கிட்ட பேசி பார்போம். ஒரு 10 mark கேள்வி இன்னும் பாக்கி இருக்கே. பரவால்ல. போனா போகுது!!’
அபிநயா:
‘ப்ச்!! போய்டாளே!!இப்போ என்ன பண்றது?’ வேக வேகமா வேக வேகமா எழுதி முடிச்சிட்டு வெளில வந்தேன். ‘போச்சு!! ஏன் பாக்ஸ் போச்சு! அது என்னோட பாக்ஸ். அவ எப்படி…’
‘அபி!!’, சாரதாவின் குரல். தயங்கி தயங்கி ஏன் கிட்ட வந்தாள். ‘எங்க என் பாக்ஸ்? எனக்கது வேணும்னு சொல்லணும் போல தோணிச்சு. அதுக்குள்ளே அவளே என் பாக்ஸ திருப்பி குடுத்திட்டா’
20 ஆண்டுகளுக்கு பின்னர், அபிநயாவிற்கு சாரதாவைப் பற்றிய நினைவிருந்தது. சாரதாவிற்கும்தான். தத்தம் உலகினை first time இருளச் செய்தவர்களாக. ஆனால், இருவருக்குமே உண்மையில் அவர்களது ‘உலகினை first time இருளசெய்ததன்’ காரணியான ஜாமெட்ரி பாக்ஸ் நினைவில் இல்லை!
October 10, 2010
ஜாமெட்ரி பாக்ஸ்
Filed under: stories — sindhuvr @ 5:11 pm
Advertisement
2 Comments »
RSS feed for comments on this post. TrackBack URI
First post typed in tamil eh? good one
-Sundar
Comment by Anonymous — October 11, 2010 @ 5:08 am |
Thanks
I took around one month to complete typing this post. Yabbaa!! Wondering how do you write poems (with good tamil words that too !!) in blogspot!! Ungalukku kannagi selai area la cut out thaan
Comment by Sindhu — October 11, 2010 @ 5:30 am |